தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
நடிகை சௌகார் ஜானகி உள்பட தமிழகத்தை சேர்ந்த ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.
இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகளை பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. நாளை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பத்ம விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத், உத்தரப் பிரதேச முன்னள் முதல்வர் கல்யாண் சிங், ராதேஷ்யாம் கெம்கா, பிரபா அத்ரே ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மற்றும் கல்விக்காக சிற்பி பாலசுப்பிரமணியன், கலைக்காக பல்லேஷ் பஜண்ட்ரி, சமூகப் பணிக்காக எஸ்.தாமோதரன், கலைக்காக சௌகார் ஜானகி, கலைக்காக முத்துக்கண்ணம்மாள், கலைக்காக ஏ.கே.சி.நடராஜன், மருத்துவத்திற்காக வீராசாமி சேஷையா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment