தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?; குடிமகன்கள் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 25, 2022

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?; குடிமகன்கள் ஷாக்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?; குடிமகன்கள் ஷாக்!


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழலில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி குடிமகன்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.
சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் 26000 விவசாயிகளூக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 74000 விவசாயிகளூக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 8950 மின் மாற்றிகள் அமைக்கும் பணியில் 8021 மின் மாற்றிகள் அமைக்கபட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட அல்லது நேரம் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா? என, கேட்கிறீர்கள். கொரோனா காலத்திலும் ஒயின் ஷாப் மூடப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad