வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர தம்பதியினர்: குவியும் வாழ்த்துக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 21, 2022

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர தம்பதியினர்: குவியும் வாழ்த்துக்கள்!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர தம்பதியினர்: குவியும் வாழ்த்துக்கள்!


பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளனர்.
பாலிவுட் உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.

ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா, கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்புமிக்க நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் எங்களின் செலுத்துவதால் தனிப்பட்ட விசயங்களுக்கு மதிப்பு அளிக்க கேட்டுகொள்கிறோம், மிக்க நன்றி’ என்று தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பலரும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது குறித்து இந்த தம்பதினர் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad