கொரோனா செம ஸ்பீடு; அமைச்சர் கூறும் அப்டேட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 19, 2022

கொரோனா செம ஸ்பீடு; அமைச்சர் கூறும் அப்டேட்!

கொரோனா செம ஸ்பீடு; அமைச்சர் கூறும் அப்டேட்!


தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, திருமங்கலம் பகுதியில் உள்ள கப்பலூரில், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் புதிய அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் ரூபாய் 2 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை பறந்த உடல் உறுப்புகள்!

நிகழ்வில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில்:
" மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

தேவைப்படும்போது கொரோனா சிகிச்சை மையம் கூடுதலாக திறக்கப்படும். மதுரையை பொருத்தவரையில் நிறைய படுக்கை வசதிகள் உள்ளது. இங்கு குறைவான பாதிப்பே உள்ளது, தேவைப்படும் பட்சத்தில் அதிகரிப்போம்.

பூஸ்டர் டோசை பொருத்தவரை 9 மாதத்திற்கு பிறகு தான் போடவேண்டும். இரண்டாம் தலைமுறை தடுப்பூசி போட்ட யாருக்கும் 9 மாதங்கள் முடிந்து இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தாலும் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன.

தற்போது தடுப்பூசியைப் பொருத்தவரை தட்டுப்பாடு எதுவுமில்லை. அனைவரும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்கிறார்கள். தற்போது கொரோனா பரவல் வேகமாக உள்ளது. ஆனால் அதிக அளவு பாதிப்பு இல்லை", இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad