செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 19, 2022

செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்!

செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்!



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட இருப்பதாக பரவும் தகவல் தமிழக அரசியலில் நெருப்பு பிழம்பாய் தகிக்கிறது. அதே சமயம் இந்த தகவல் அவரது தம்பிகளை வெகுவாய் சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாக வளசரவாக்கம் பகுதியில் பேச்சு அடிபடுகிறது.
தமிழ் சினிமாவில் சிறைக்கு செல்லும் நடிகர் கார்த்தி, ‘என்னை புடிச்சுகிட்டு வந்துட்டிங்க. எனக்கு உறுதுணையா இருந்த ஆளை காணோம்...வேர் ஈஸ் அப்பாதுரை?’ என கேட்பார். அப்புறம் அடுத்த செகண்ட், நடிகர் சந்தானத்தை போலீஸ் கைது செய்து அவருக்கு துணையாக சிறைக்குள் அனுப்பி வைக்கும்.

ஏறக்குறைய இந்த காமெடி சீன் சாட்சாத் சீமான் விவகாரத்தில் இம்மி பிசகாமல் அரங்கேறி இருப்பதால் ஹரி நாடாருக்கு துணையாக, சீமானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தமிழகத்தில் திமுக எதிர் கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலினை படுகேவலமாக விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர் சீமான். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்கிற மரியாதை துளியும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி... தான் பேசியது மட்டும் அல்லாமல் தன்னை சுற்றி வரும் விடலை பையன்களையும் நேகா தூண்டிவிட்டு மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ய வைத்தார்.ஸ்டாலின் போன்று பேசி காட்டுவது, ஸ்டாலினுக்கு பாட்டு எழுதி மேடையில் பாடி காட்டி புஹா.. புஹா.. என்று சிரித்து நக்கல் அடிப்பது, திடுட்டு கும்பல், ஏமாற்று கும்பல் என்று, திமுகவை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய முடியுமோ? அதையெல்லாம் தாண்டி சீமான் கிழித்து தொங்கப் போட்டார்.
இதையெல்லாம் கண்டு ஆத்திரப்படாமல் திமுக அஞ்ச வேண்டும் என்பதற்காக மோடி என்னை அழைத்தார்.. தூதுவிட்டு பேசினார். ஆர்எஸ்எஸ்ஐ கண்டித்து கடிதம் எழுதினார்... நிதி சுமையை தீர்ப்பதாக வாக்குறுதி தந்தார்கள் என ஏகத்துக்கு செய்தியாளர்களிடாம் சீமான் அள்ளிவிட்டார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் இயக்கங்களை நேருக்கு நேராக கையாண்ட பக்குவமும், அரசியல் ராஜதந்திரமும் கொண்ட திமுகவோ, சீமானை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை. ஆனாலும் சீமான் மீது கருப்புப் புள்ளியை வைத்து விட்டு, கழுகு போன்று காத்திருந்தது திமுக.

மேடையில் பல்லை கடித்துக்கொண்டு கர்ஜிப்பது.. கீழே இறங்கியதும் குறிப்பிட்ட நபருக்கே போன் போட்டு தாஜா செய்வது போன்ற பம்மாத்து பலே வேலைகளை சீமான் செய்து வந்ததால் அவ்வளவு எளிதில் சிக்காமல் போக்கு காட்டி வந்தார்.

இப்படி பக்குவம் இல்லாமல் நடந்து கொண்ட சீமான், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது என்ற நினைப்பு துளியும் இல்லாமல் செருப்பை கையில் எடுத்து காட்டியதும், அந்த செருப்பு கட்சி கொடியான கருப்பு-சிவப்பு நிறத்தில் இருந்ததும் தான் சீமான் தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பு என்றும் சொல்ல வேண்டும்.இதன் விளைவு நடிகை விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்தி கறக்க வேண்டியதை கறந்து விட்டு கழட்டிவிட்ட சம்பவத்தில் நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு கடந்த 2020ம் ஆண்டு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்.
இந்த வழக்கை திருவான்மியூர் போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசில் விஜயலட்சுமி ஒரு பரபரப்பு வாக்குமூலத்தை அளித்து இருந்தார். அந்த வாக்குமூலத்தில் நடிகை விஜய லட்சுமி கூறி இருந்ததாவது:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் என்னை மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு விஜய லட்சுமி கூறி இருந்தார்.இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தனர். ஆனாலும், அதிமுக ஆட்சி என்பதால் சீமான் மீதோ, ஹரிநாடார் மீதோ போலீசார் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் செருப்பை காட்டிய சீமானுக்கு நாம் எதை காட்டுவது? என யோசித்த திமுகவுக்கு அல்வா துண்டு மாதிரி நடிகை விஜயலட்சுமி துப்பு கொடுக்க திருவான்மியூர் போலீசுக்கு பரபரப்பு உத்தரவு பறந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நடமாடும் நகைக்கடை ஹரிநாடார் அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூருக்கே சென்ற போலீஸ், ‘உங்களை கைது செய்யப்போறோம்’ன்னு சொல்லி இருக்கின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad