திருச்சியில் ஜல்லிக்கட்டு… ஒருவர் உயிரிழந்த சோகம்!
6666666666666666666666666666666666666666666666666666
திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் மாடு வளர்ப்பாளர் ஒருவரை, மாடு தொடை மற்றும் அடிவயிற்று பகுதியில் குத்தியதில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டை வாடி வாசலுக்கு அழைத்து வந்தபோது மாடு வளர்ப்பாளர் மீனாட்சி சுந்தரம் (30) என்பவரை மாடு தொடை மற்றும் அடிவயிற்று பகுதியில் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பெரியசூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை துவங்கியது. போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டில் 400 மாடுகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார் கார்த்தி!
வெளியூர் பார்வையாளர்கள் நிகழ்ச்சியினை தொலைக்காட்சி அல்லது இணையதளம் வழியாக பார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் முட்டி காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறையின் சார்பில் 32 மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 400 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மதியம் 3 மணியளவில் நிறைவுபெறும் என கூறப்பட்டுள்ளது.
போட்டியில் காளை குத்தி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment