ஒளிரும் நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

ஒளிரும் நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!


ஒளிரும் நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண லேசர் சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது 125வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், அவரது முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர்களுக்கு 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விருதையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நேதாஜிக்கு புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும். இந்தியர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்களிப்பை தந்தவர் நேதாஜி. கடுமையான சோதனைகளை சந்தித்த போதும் ஆங்கிலேய அரசுக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி.
வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் வரலாற்று சிறப்பான நிகழ்வு அரங்கேறி உள்ளது. சுதந்திர போராட்டத்தில் தேச மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர் நேதாஜி. "சுதந்திர இந்தியா கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள், இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை" என்று நேதாஜி கூறுவார். சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதற்குள், 2047 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad