பிக் பாஸ் கோப்பையுடன் ராஜு சந்தித்த பிரபலங்கள் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

பிக் பாஸ் கோப்பையுடன் ராஜு சந்தித்த பிரபலங்கள் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..!

பிக் பாஸ் கோப்பையுடன் ராஜு சந்தித்த பிரபலங்கள் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..!


பிக் பஸ் கோப்பையுடன் நெல்சன் மற்றும் பாக்யராஜை சந்தித்த ராஜு
விஜய் டிவியில் சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் சீசன் 5 இறுதிப்போட்டி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ராஜு பிக் பாஸ் டைட்டிலை வென்றார். இந்த சீசனில் ரசிகர்கள் மனதில் அதிகம் இடம்பிடித்த போட்டியாளர்களின் பட்டியலில் ராஜு முதல் இடத்தில் இருக்கின்றார்.

எதற்கும் கோபம் கொள்ளாது நகைச்சுவை உணர்வோடு பழக்ககூடிய ராஜுவின் தன்மை அனைவர்க்கும் பிடித்து போக ரசிகர்கள் வாக்குகளை வாரி குவித்தனர். விஜய் டிவியில் சீரியல்களில் நடித்துவந்த ராஜு பல சீரியல்களுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் கோப்பையை வென்ற ராஜுவிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வந்த நிலையில் பல படவாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் கோப்பையுடன் ராஜு அவரது நெருங்கிய நண்பரும் முன்னணி இயக்குனருமான நெல்சனை சந்தித்துள்ளார்.

மேலும் புகழ்பெற்ற இயக்குனர் பாக்கியராஜ் அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் ராஜு. ஒரு காலத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக ராஜு பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது நெல்சன் மற்றும் பாக்யராஜை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad