பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தாமரை..போட்டியாளர்களின் ரியாக்க்ஷன் என்ன.? ப்ரோமோ உள்ளே..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தாமரை..போட்டியாளர்களின் ரியாக்க்ஷன் என்ன.? ப்ரோமோ உள்ளே..!

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தாமரை..போட்டியாளர்களின் ரியாக்க்ஷன் என்ன.? ப்ரோமோ உள்ளே..!


பிக்பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் சென்ற தாமரையை வரவேற்ற போட்டியாளர்கள்
நாட்டுப்புற கலைஞராக இருந்து தற்போது உலகம் முழுதும் இருக்கும் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் தாமரை.. நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற போட்டியாளர்களின் ஒருவர் தாமரை. கடந்த வாரம் இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


அனைவரின் வரவேற்பை பெற்ற தாமரை எப்படி இறுதிப்போட்டிக்கு செல்லாமல் வெளியேறமுடியும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவரது சமீபத்திய செய்கை, ப்ரியங்காவுடன் மோதலில் ஈடுபட்டது தான் அவர் வெளியேறியதற்கு காரணம் என்கின்றனர் சில ரசிகர்கள்.

இது ஒருபுறமிருக்க தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டியுள்ளதால் இந்த சீசனில் பங்குகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக வீட்டிற்கு மீண்டும் வந்து இறுதிப்போட்டியாளர்களை வாழ்த்திவருகின்றனர்.

இந்நிலையில் இன்று தாமரை பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்கின்றார். இதுகுறித்த ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது. அதில் பாட்டுபாடிக்கொண்டே பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைகிறார் தாமரை ,அவரை பார்த்ததும் பாவனி ஓடிபொய் தாமரையை கட்டியணைக்கின்றார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தாமரையை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்த ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment

Post Top Ad