பாமகவினருக்கு வலை விரிக்கும் எடப்பாடி: சேலத்தை பலப்படுத்த பிளான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

பாமகவினருக்கு வலை விரிக்கும் எடப்பாடி: சேலத்தை பலப்படுத்த பிளான்!

பாமகவினருக்கு வலை விரிக்கும் எடப்பாடி: சேலத்தை பலப்படுத்த பிளான்!


பாமகவிலிருந்து முக்கிய நிர்வாகிகளை அதிமுகவுக்கு கொண்டு வரும் வேலையை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.
சட்டமன்ற கூட்டத் தொடர், கொரோனா மூன்றாவது அலை, பொங்கல் பண்டிகை என அடுத்தடுத்து வந்தாலும் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஏப்ரல் - மே மாதங்களுக்கு தள்ளி வைக்கலாமா என்று திமுக தலைமை மட்டத்தில் ஒரு சிறிய விவாதம் நடைபெற்றதாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி முதல் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரினால் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் என்பதால் தேர்தல் பணிகளை தொடங்க கட்சியினருக்கு உத்தரவுகள் போயினவாம்.

திமுகவில் இப்படி என்றால் அதிமுகவில் ஆள் பிடிக்கும் படலத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இணை ஒருங்கிணைப்பாளரானாலும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் வெயிட் காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் பாமகவுக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதனாலே பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கூட்டணியை உறுதிபடுத்தினார் எடப்பாடி பழனிசாமி. 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பாமக பின்னர் கூட்டணியிலிருந்து விலகியது.

கூட்டணி தர்மத்தை அதிமுக மீறிவிட்டதாக ராமதாஸ் பேசியதும் எடப்பாடி பழனிசாமியை அதிருப்திக்குள்ளாக்கியது. பதிலுக்கு அவரும் பாமகவுக்கு கூட்டணி மாறுவது வாடிக்கைதான் என்று விமர்சித்தார்.

இந்த சூழலில் பாமகவிலிருந்து முக்கிய புள்ளிகளை அதிமுகவுக்கு கொண்டு வரும் வேலையை தொடங்கியுள்ளார். பாமகவின் மாநில துணைச் செயலாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான திருஞானம் அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து சேலம் மாவட்ட பாமக புள்ளிகளை வளைத்துள்ளார்.

சேலம் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “நம்ம ஆட்சியில பலன் அடைஞ்ச பாமக நிர்வாகிகள்கிட்டல்லாம் பேசுங்க. அவங்களை அதிமுகவுக்கு வரச் சொல்லுங்க. திமுக ஆளுங்கட்சியாக இருக்குனு அங்க போனா, அவங்களுக்கு மரியாதை கிடைக்காது” என்று பேசியுள்ளார்.

முதற்கட்டமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பாமக புள்ளிகளை கொத்தி தூக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.


No comments:

Post a Comment

Post Top Ad