தேசிய இளைஞர் விழாவில் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்த மோடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

தேசிய இளைஞர் விழாவில் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்த மோடி!

தேசிய இளைஞர் விழாவில் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்த மோடி!


புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழா இன்று தொடங்கி வருகிற 16 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வந்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இளைஞர் விழாவும் ஆன்லைன் மூலம் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை தேசிய இளைஞர் விழாவின் தொடக்கவிழா காணொளி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைத்தார்.

மேலும் புதுவை கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.122 கோடியில் தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார்.

இந்த விழா புதுவை அண்ணா சாலையில் உள்ள ரெசிடன்சி ஓட்டலில் காணொளி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்றனர். விவேகானந்தர் பிறந்த நாளான இன்று தேகியஇளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad