புதுவையை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

புதுவையை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ்!

புதுவையை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ்!புதுச்சேரியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 895-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 4,387 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ததில், புதுவையில் 801 பேர், காரைக்காலில் 60 பேர், மாஹேவில் 22 பேர் மற்றும் ஏனாமில் 10 பேர் என மாநிலம் முழுவதும் 895 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,203-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனா பலி எண்ணிக்கை 1883-ஆக உயர்ந்துள்ளது.

புதுவையை பொறுத்தவரையில் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமான தடுப்பூசி செலுத்தும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முதல் தவணை தடுப்பூசியை 8,99,596 பேர், இரண்டு தவணைகளையும் 5,84,896 பேர் என 14,85,255 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 763 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள்.

மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், வீரியம் குறைவாக உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கருதி முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad