திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு: உடனே இதை பண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 27, 2022

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு: உடனே இதை பண்ணுங்க!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு: உடனே இதை பண்ணுங்க!



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட்டுகள் நாளை விற்பனை தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் நாளையும், இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாளும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்து திருப்பதியை நோக்கி பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும், 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக, திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என ஜனவரி 28ஆம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad