51 பந்தில் 95 ரன்…மீண்டும் கலக்கிய இந்திய வீரர்: பிரெட் லீ மிரட்டல் பந்துவீச்சால் உலக XI த்ரில் வெற்றி!
இந்திய மகாராஜா அணிக்கு எதிரான போட்டியில் வேல்ட் ஜெய்ண்ட் த்ரில் வெற்றியைப் பெற்றது.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகாராஜா, ஆசிய லைன்ஸ், வேல்ட் ஜெய்ண்ட்ஸ் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
தற்போது நடந்த போட்டியில் இந்திய மகாராஜா அணியும், வேல்ட் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
உலக அணி இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய உலக அணியில் ஓபனர் கெவின் பீட்டர்சன் 5 பந்துகளில் 11 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். தொடர்ந்து மஸ்டர்ட் 57 (33), கிப்ஸ் 89 (46), கெவின் ஓபிரையன் 34 (14), ஜான்டி ரோட்ஸ் 20 (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்ததால், உலக அணி 20 ஓவர்கள் முடிவில் 228/5 ரன்கள் குவித்தது.
இந்திய இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய மகாராஜா அணியில் ஓபனர் நமன் ஓஜா 51 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்து அசத்தினார். இவர் ஏற்கனவே 60 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து யூஷப் பதானும் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 45 ரன்கள் குவித்ததால், இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்நிலையில், இர்பான் பதானும் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகமானது.
கடைசி ஓவர்:
குறிப்பாக இந்தியா வெற்றிபெற்ற 6 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது பிரெட் லீ பந்துவீச வந்தார். முதல் பந்து ஒயிட் சென்ற நிலையில், அடுத்த பந்தில் இர்பான் பதானை வெளியேற்றினார். அடுத்த பந்தில் பாடியா சிங்கில் எடுத்த நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் சால்வி ஒரு ரன் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில் இரண்டு பந்துகளில் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், பாடியா ரன் அவுட் ஆனார். அடுத்து கடைசி பந்திலும் ரன் கசியவில்லை. இதனால், இந்திய அணி கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் எடுக்க முடியாமல் 2 ரன்கள் மட்டும் எடுத்து, மொத்தம் 223/7 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.
No comments:
Post a Comment