திருச்சி யார் கையில்? சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 27, 2022

திருச்சி யார் கையில்? சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்!

திருச்சி யார் கையில்? சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்வாக்கு பெற்று விளங்கும் திருச்சியில் மேயர் பதவி யாருக்கு என்ற கேள்வி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இங்கு கடந்த 1996ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 6 முறை மேயர் தேர்தல் நடைபெற்றுள்ளது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களே மேயர்களாக பதவி வகித்து வந்துள்ளனர். 2006ல் பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்டும் பெண்களே அடுத்தடுத்து மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் முதல்முறை ஆண் மேயரை காண திருச்சி தயாராகி கொண்டிருக்கிறது. அதுவும் திமுக முதல்முறை மேயர் அரியணையை அலங்கரிக்கப் போகிறது.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் இருக்கின்றன. இதில் ஆளுங்கட்சியான திமுக 50 வார்டுகள் வரை போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே எஞ்சிய வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். திருச்சி மாநகர மேயர் பதவியானது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான எம்.அன்பழகனுக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இரண்டு முறை முன்னாள் துணை மேயராகவும், நான்கு முறை கவுன்சிலராகவும் இருந்துள்ளார். மறுபுறம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ஆதரவாளர்கள் இருவரையும் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணன் மற்றும் கே.என்.சேகரன் ஆகியோர் ஆவர். இந்த மூவர் பட்டியலில் மதிவாணனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆனால் வாய்ப்புகளை பொறுத்தவரை மூவருக்கும் இடையில் போட்டி நிலவினாலும் ரேஸில் அன்பழகன் முன்னிலையில் இருக்கிறாராம். எனவே கட்சி தலைமை யாரை தேர்வு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை மேயர் பதவிக்கு பலம் வாய்ந்த நபரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஆளுங்கட்சி வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில் வழங்கியது போல் குடும்ப அட்டைகளுக்கு ரொக்கத் தொகை ஏதும் வழங்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவற்றையும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் முன்வைத்து பிரச்சார வியூகங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவின் கோட்டையாக இருக்கும் திருச்சியில் எதிர்க்கட்சிகளின் ஆட்டம் செல்லுபடியாகாது என்பது தான் நிதர்சனம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad