அதிகரிக்கும் பாதிப்பு: இனி வாரத்தில் இரு நாள்கள் முழு ஊரடங்கு!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் வாரத்தில் இரு நாள்கள் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு (ஜனவரி 14) 10 மணியளவில் தொடங்கியது. இதனால் 55 மணி நேரத்துக்கு அதாவது திங்கள் கிழமை காலை 5 மணி வரை அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வேகமாக வீசி வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24,383 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
அங்கு தினசரி பாசிடிவிட்டி விகிதம் 30% என்றளவில் உள்ளது. அதாவது நூறில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதே பாசிடிவிட்டி விகிதம். இது 5%க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால், டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின்போது கடந்த மே மாதம் 1 ஆம் தேதி 31.6% ஆக இருந்தத பாசிடிவிட்டி விகிதம் தற்போது பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் 30% என்றளவில் உள்ளது.
டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது.
“*டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்,
*தனியார் அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் 50 சதவீத திறனில் செயல்படும்,
*வார இறுதிநாள்கள் ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசியமற்ற எந்த செயல்பாடும் அனுமதிக்கப்படாது,
*பால், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் இ பாஸ் கட்டாயம்.
*அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோரின் வசதிக்காக மெட்ரோ ரயில், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நின்று கொண்டு பயணிகள் பயணிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ''டெல்லியில் கொரோனா அதிகரிப்பதற்கு ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக இருக்கலாம். மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட 81% மாதிரிகள் பெரிதும் மாற்றப்பட்ட வைரஸின் மாற்றங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன'' என்று கூறினார்
No comments:
Post a Comment