மார்ச் முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - பச்சைக்கொடி காட்டிய அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

மார்ச் முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - பச்சைக்கொடி காட்டிய அரசு!

மார்ச் முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - பச்சைக்கொடி காட்டிய அரசு!


மார்ச் முதல் மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதித்தனர். மேலும், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தினர். பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் மார்ச் மாதம் முதல், அதாவது புதிய கல்வி ஆண்டு முதல், மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக, தாலிபான் அரசின் கல்வித் துறையின் செய்தித் தொடர்பாளர் அஸிஸ் அகமது ரேயான் கூறியதாவது:
பெண்களின் பாதுகாப்புக்காக புதிய நடைமுறைகளை உருவாக்கி வந்ததால், பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்களுக்காகவே பெண் ஆசிரியர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது. மாணவிகளின் நலன் கருதி, மேலும் பல பெண் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்த உள்ளோம். பெண் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில், மூத்த ஆண் ஆசிரியர்கள் மூலம் மாணவிகளுக்கு பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad