விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 25, 2022

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!



விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் உள்ள உலக பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காலத்தில் ஆலய கும்பாபிஷேக திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புதுறை வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நடைபெற உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கொரோனா தடுக்கும் விதமாக மருத்துவ துறை சார்பில் தடுப்பூசி போடப்படும் என கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
ரேஷன் கார்டுகள் தேவையில்லை; அதிரடியான முடிவு எடுத்த மக்கள்!

மேலும், கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், வட்டாட்சியர் தனபதி, நகராட்சி (பொறுப்பு) ஆணையர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தலைமை மருத்துவர் எழில், மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad