சென்னை மாநகர பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்; கே.என். நேரு தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 25, 2022

சென்னை மாநகர பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்; கே.என். நேரு தகவல்!

சென்னை மாநகர பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்; கே.என். நேரு தகவல்!



சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு.
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தில் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் மாநகர பேருந்து நிலையங்கள் பல்வேறு இடங்களில் நவீனமயமாக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு மேற்கொண்ட பின்பு அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"இந்த பேருந்து நிலையம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதை அடுத்து, இங்குள்ள தேவைகள், கழிப்பறைகள், பயணிகளுக்கான இருக்கைகள் ஆகியவை அமைப்பது குறித்து ஆய்வு செய்தோம்..

நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில், சென்னையில் மொத்தம் 252 கழிப்பறைகள் அமைப்பது குறித்த திட்டத்தினை ஆலோசனை செய்தோம். முதல்வரின் அறிவிப்பை அடுத்து அந்த பணிகள் விரைவில் துவங்கப்படும்.

அந்த கழிவறைகள் அனைத்தும், 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்குவது போல தனியாரை கொண்டு சிறப்பாக பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

பிரைவேட் மூலம் காண்ட்ராக்ட் முறையில் நடைபெறும் பணிகளை செய்யும் பணியாளர்களுக்கு பணம் சரியான முறையில் வழங்க படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது போன்ற குற்றச்சாட்டுகள் முறையாக தெரிவிக்க படும் பட்சத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கையில், தூய்மை பணிகள் சென்னை முழுவதும் தனியார் அமைப்புகளை கொண்டு, இரவு நேரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 90% குப்பைகள் சுத்த படுத்த படுகின்றது. மேலும் பராமரிக்க படாத இடங்களை குறித்து புகார் வரும் நிலையில் அவை நடவடிக்கையின் பேரில் சீர் செய்யப்படும்..



No comments:

Post a Comment

Post Top Ad