பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட 50 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா!
சேலம் அரசு மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட 50 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று புதிதாக 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் வாரம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்.
அந்தவகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகளில் பணியாற்றுவார்கள் என பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் மட்டும் 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் அறுவை சிகிச்சை அரங்கில் பணிபுரியும் மாணவர்கள் என 28 பேருக்கு கொரானா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 50 பேரும் கொரோனா மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். ஒரு சிலருக்கு தீவிர அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment