திருச்சி - திருப்பதிக்கு விமான சேவை... இனி பறந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

திருச்சி - திருப்பதிக்கு விமான சேவை... இனி பறந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்!

திருச்சி - திருப்பதிக்கு விமான சேவை... இனி பறந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்!


திருச்சியில் இருந்து வாரத்தில் நான்கு நாட்களில் திருப்பதிக்கு விமான சேவை வழங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போது, ஐந்தாயிரம் இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் முன்பதிவு செய்வோர் என நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த கோரிக்கை நிறைவேறும் வகையில் வரும் 18-ம் தேதி செவ்வாய்கிழமை முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. இருப்பினும் கட்டணம் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை


மாலை 6.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் விமானம் இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. அதேபோல், திருப்பதியில் மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு திருச்சி வந்தடையும். இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"இண்டிகோ நிறுவனம் சார்பில் திருச்சியிலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு , டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து, திருச்சியிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை ஜனவரி 18-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு ரயில் அல்லது பேருந்து மூலம் பயணம் செய்தால் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும். இனி விமானம் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் திருப்பதிக்கு சென்று விடலாம் என்பதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad