டாஸ்மாக் திடீர் உத்தரவு; போராட்டத்தில் குதித்த பார் ஓனர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

டாஸ்மாக் திடீர் உத்தரவு; போராட்டத்தில் குதித்த பார் ஓனர்கள்!

டாஸ்மாக் திடீர் உத்தரவு; போராட்டத்தில் குதித்த பார் ஓனர்கள்!டாஸ்மாக் அதிகாரிகள் போட்ட திடீர் உத்தரவால் பார் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மது பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட பார் உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பியிடம் ஒரு புகார் கொடுத்தனர். அந்த மனுவில் பார் உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த 30ம் தேதி பார் டெண்டர் நடத்துவதாக இருந்தது. இதை ஒத்திவைத்து 31ம் தேதி நடத்துவதாக டாஸ்மாக் அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆனால் 30ம் தேதியன்று இரவே டாஸ்மாக் கடைக்கு 120 பேருக்கான விண்ணப்பத்தினை ஒரே ஒரு நபர் வந்து இரவோடு இரவாக கொடுத்துள்ளார். இந்த 120 பேருமே வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் விண்ணப்பம் கொடுக்க நேரிலும் வரவில்லை. நேரடியாக பெட்டியில் போடவும் வரவில்லை. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரவை ஆய்வு செய்து பார்த்தால் விவரம் தெரிய வரும்.

கடந்த 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள கேமராவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாவட்டத்தை சேர்ந்த 120 பேரும் டெண்டரில் நேரடியாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.

எனவே 120 பேரும் நேரடியாக வந்தால் மட்டுமே அவர்களது விண்ணப்பத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது நேரில் வந்துள்ளவர்களின் விண்ணப்பம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் டாஸ்மாக்கில் நடக்கும் டெண்டர் முறைகேட்டுக்கு தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விருதுநகர் மாவட்ட பார் உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நலச்சங்க தலைவர் நாகராஜன் தலைமையில் பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad