வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்: இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினிகாந்த்!
தனது வீட்டின் முன்பு புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினி கைகாட்டி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் 'அண்ணாத்த'. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி 'அண்ணாத்த' படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, தங்க செயின் பரிசாக அளித்தார். அத்துடன் சிவாவுடன் 3 மணிநேரம் கலந்துரையாடிவிட்டு வீடு திரும்பினார்.
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், ரஜினிகாந்த்தின் பிறந்த நாளிலும் அவருக்கு வாழ்த்து கூற ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டிற்கு முன்பு குவிவது வழக்கம். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று காலை முதலே ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்தனர். இதனை தொடர்ந்து தனது வீட்டின் வாசலில் தன்னை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment