மெடிக்கல்ல இந்த மருந்து வாங்குனா கொரோனா டெஸ்ட்... புது ரூட்டில் ஆப்பு!
சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகங்களில் மருந்து வாங்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வீடு மற்றும் மருத்துவமனைகளில் 62,007 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,76,147 -ஆக அதிகரித்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சுமார் 500 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனவரி 20ம் தேதி நிலவரப்படி ஒரே நாளில் 8,011 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறினார்.
பொங்கல் பரிசு ஸ்வாகா; அயோக்கியர்கள் திமுகவினர்; ஜெயகுமார் பாய்ச்சல்!
மேலும், சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் 1913 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்றி தாங்களாகவே மருந்து கேட்டு வரும் நபர்களின் விபரங்களை மருந்தக ஊழியர்கள் சேகரித்து வைத்து மாநகராட்சிக்கு வழங்கினால் அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அறிகுறி உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதோடு, முடிவுகள் விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.
No comments:
Post a Comment