சென்னையில் தீயாய் பரவும் கொரோனா… ஏழு நாள் பாதிப்பு எவ்வளவு தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

சென்னையில் தீயாய் பரவும் கொரோனா… ஏழு நாள் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தீயாய் பரவும் கொரோனா… ஏழு நாள் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?



சென்னையில் ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்து 489-ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் ஆகியவை கூட்டுச்சேர்ந்து தமிழ்நாட்டில் மூன்றாவது அலை பரவலை ஏற்படுத்தியுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதனை மெய்பிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று (டிச.3) 1,728 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அது இரட்டிப்பாகும் வகையில் உயர்ந்து 2,731-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் மக்களிடையெ அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மூன்றாவது அலை பரவல் புயல்போல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி 294 பேர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். டிசம்பர் 30 - 397, டிசம்பர் 31-589, ஜனவரி 1- 682, ஜனவரி - 776, ஜனவரி 3 - 876 என அதிகரித்து இன்று (ஜனவரி 4) ஆயிரத்து 489-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் மட்டும் 5,103 பேருக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 5,593-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 93 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“மாஸ்க் போடுங்க”- வீதி வீதியாக நடந்து சென்று மாஸ்க் வழங்கிய முதலமைச்சர்

சென்னையை பொறுத்தவரையில் நேற்று 20,336 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 876 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தொற்று விகிதம் 4.3-ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 4921 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 158 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் விகிதம் அதிகரித்துள்ளதால் விரைவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad