ஸ்டாலின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் முன்னாள் முதல்வர்: கிடைத்தால் சரவெடிதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

ஸ்டாலின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் முன்னாள் முதல்வர்: கிடைத்தால் சரவெடிதான்!

ஸ்டாலின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் முன்னாள் முதல்வர்: கிடைத்தால் சரவெடிதான்!


உத்தரப்பிரதேச தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க முதல்வர் ஸ்டாலினிடம், அகிலேஷ் யாதவ் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது இமேஜ் சார்ந்த விஷயம் என்பதால், அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கநாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைபற்றியது. சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. கடந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததே தோல்விக்கு காரணம் என்பதால், இம்முறை சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.ப்பட்டுள்ளதால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.இந்த தேர்தலில் நான்கு முனைப்ப்போட்டி இருப்பதாக கூறப்பட்டாலும், உண்மையான போட்டி என்னவோ பாஜக-சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இடையேதான் என்கிறனர் அம்மாநில அரசியல் விவரம் அறிந்தவர்கள். தேர்தலுக்கு முந்தைய சில கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கணித்துள்ளன. ஆனாலும், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, சரியான வியூகம் அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் பாஜகவை நிச்சம் வீழ்த்தி விடலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையொட்டி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவ வீழ்த்த அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை அமைத்து திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி, உத்தரப்பிரதேச தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க முதல்வர் ஸ்டாலினிடம், அகிலேஷ் யாதவ் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதில் ஸ்டாலின் திடமாக உள்ளார். எனவே அவர் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுக சீனியர் எம்.பி.க்களை அகிலேஷ் யாதவ் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. தனது கட்சிக்கு ஆதரவளித்து கடிதம் ஒன்றை தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அகிலேஷ் யாதவ், ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கும் படத்தை உத்தரப்பிரதேசம் முழுவதும் போஸ்டராக ஒட்டி பிரசாரம் செய்யவும் விரும்புகிறாராம்.

ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், சமாஜ்வாதி கட்சிக்கு எப்படி ஆதரவளிப்பது என்று ஸ்டாலின் தயக்கம் காட்டி வருவதாக கூறுகிறார்கள். இந்த தகவல் அகிலேஷ் யாதவுக்கு பாஸ் செய்யப்பட்டதும், “தமிழ்நாடு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்குத்தானே காங்கிரஸ் உடன் கூட்டணி; இது உத்தரப்பிரதேச தேர்தல் என்பதால் தாரளமாக எனக்கு ஆதரவளிக்கலாம்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தாராம்.
மேலும், காங்கிரஸ் சிங்கிள் டிஜிட்டில் தான் வெற்றி பெறும் எனவே எனக்கு ஆதரவளிக்க சொல்லுங்கள் என்றும் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். ஸ்டாலின் ஆதரவு கிடைத்து விட்டால், அதனை வைத்து பல்வேறு பிரசாரத் திட்டங்களையும் முன்னெடுக்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad