ஒயின் சரக்கு அயிட்டமே கிடையாதாம்... சிவசேனா எம்பி அடடே விளக்கம்!
ஒயி்ன் மதுபான வகையிலேயே வராது என்று கூறி, சிவசேனா எம்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ‘ஒயின்’ வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து அந்த மாநில அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆண்டுக்கு 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறும்போது, 'மதுபான தொழிலின் மீதான காதல் காரணமாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவி்ன் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக, ஆளும் சிவசேனா கட்சியின் எம்பி., சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ' சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யப்படுவதன் பயனாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அத்துடன் ஒயின் என்பது மது வகை கிடையாது' என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம் யாராவது ஒயின் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று மகாராஷ்டிர போலீஸ் எச்சரித்துள்ளது.
சூப்பர் மார்க்கெடகளில் ஒயின் விற்பனைக்கு மாநில அரசு அனுமதி அளித்தாலும், பள்ளி, வழிப்பாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயினை விற்க உரிமம் வழங்கப்படாது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment