தபால் வாக்குகள் வேண்டாம்... நீதிமன்றத்தில் அவசரமாக முறையிடும் அதிமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

தபால் வாக்குகள் வேண்டாம்... நீதிமன்றத்தில் அவசரமாக முறையிடும் அதிமுக!

தபால் வாக்குகள் வேண்டாம்... நீதிமன்றத்தில் அவசரமாக முறையிடும் அதிமுக!



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்குகளுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர். எம். பாபு முருகவேல், உயர் நீதிமன்றத்தில் அவசர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி 138 நகராட்சி 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாகவும், 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மாநில தேர்தல் ஆணையம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 80 ஆயிரம் காவல் துறை பணியாளர்களும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களும் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பட உள்ளனர்.

பெரும்பாலும் தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்கப்படும். அதன் அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை தேர்தல் நாட்களுக்கு முன்பாகவே செலுத்திவிடுவார்கள்.
இந்த தேர்தலை பொறுத்தவரை மிகக் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் என்பதால், இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிற அரசு அலுவலர்களும், காவல்துறை பணியாளர்களும் ஏற்கெனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இந்த தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் தபால் வாக்கு என்ற முறையை இந்த தேர்தலில் முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும். இதற்கு காரணம், வாக்கு எண்ணும்போது தபால் வாக்குகளில்தான் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 1, 2 வாக்குகள்கூட வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்பதால், ஆளும் கட்சியின் அதிகார தலையீட்டின் காரணமாக வெற்றி பெற்றவர் தோல்வி பெற்றவராகவும், தோல்வியுற்றவர் வெற்றி பெற்றவராகவும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் தபால் வாக்குகளுக்காக அரசுக்கு ஏற்படும் கால விரையமும், பண விரயமும் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.எம். பாபு முருகவேல், நேற்று முன்தினம் (ஜனவரி 27) தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் அதன் மீது உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவசர ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில அவர் இன்று தாக்கல் செய்துள்ளார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad