கோவாக்சின் போட்டவர்களுக்கு எச்சரிக்கை.. இதை மட்டும் செய்யாதிங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

கோவாக்சின் போட்டவர்களுக்கு எச்சரிக்கை.. இதை மட்டும் செய்யாதிங்க!

கோவாக்சின் போட்டவர்களுக்கு எச்சரிக்கை.. இதை மட்டும் செய்யாதிங்க!கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாரசிட்டமால், வலி மாத்திரைகள் தேவையில்லை என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலையின் தொடக்க நிலையில் இந்தியா இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சூழலில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவாக்சின் தடுப்பூசி போட்ட சிறுவர்களுக்கு மூன்று 500 மில்லிகிராம் பாரசிட்டமால் மாத்திரைகளை தடுப்பூசி மையங்கள் பரிந்துரைப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. கோவாக்சின் போட்ட பிறகு பாரசிட்டமால் அல்லது வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தேவையில்லை.

மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பின் பாரசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், கோவாக்சின் போட்டவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரை தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad