ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 18, 2022

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு!


9 விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து, சிறப்பு ரயில்கள் இயக்கம், முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நீக்கம் என பல மாற்றங்கள் செய்யப்பட்டன. கொரோனா பரவல் குறைந்த போது சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.
தற்போது 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆா். பெங்களூரு லால்பாக் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரயில், எா்ணாகுளம்-கே.எஸ்.ஆா். பெங்களூரு அதிவிரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சேர்க்கப்படவுள்ளன.இந்த முன்பதிவில்லாத பெட்டிகள் சேர்ப்பு வரும் ஜனவரி 20-ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது. இதேபோல், தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளன. மேலும், சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரயிலில் 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் (நாளை) 20-ஆம்தேதி முதல் சேர்க்கப்படவுள்ளன.

இதேபோல், மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில், கோயம்புத்தூா் -திருப்பதி அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் உள்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad