ரஜினி இப்படி செய்வாருன்னு யாரும் எதிர்பாக்கல...வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்..!
ரஜினி மேடையில் நடனமாடும் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.
ரஜினிகாந்த் பெயரிலேயே காந்தம் வைத்திருக்கும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் படங்களின் மூலம் ஈர்த்தார். 50 ஆண்டுகளுக்கு மேல் சூப்பர்ஸ்டாரா வலம் வந்துகொண்டிருக்கும் ரஜினியின் ஸ்டைலுக்கு மயங்காத ஆளே கிடையாது. நடித்த படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்களைஅனைத்துயும் மெகாஹிட்டாக கொடுத்து தனக்கான தனி சாம்ராச்சியத்தை உருவாக்கியவர் ரஜினி.
மாசாகவும் அதே சமயங்களில் கிளாஸாகவும் நடிக்கும் வல்லமை கொண்ட ரஜினிக்கு சமீபகாலமாக வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து நம்மை ஈர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ரஜினி.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு இவர் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. இந்நிலையில் ரஜினியின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. பொதுவாக ரஜினி சினிமாவிலேயே வசனங்கள் பேசி, நடனமாடி நாம் பார்த்திருப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரஜினி மேடையில் நடனமாடி பல பஞ்ச் வசனங்களை பேசியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு மிகப்பெரிய சினிமா நிகழ்ச்சியில் ரஜினி பாட்ஷா படத்தில் வரும் கெட்டப்பை போட்டுகொண்டு நடனமாடி பஞ்ச் வசனங்கள் பேசி கலக்கியுள்ளார். ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் என்ற பல வசனங்களை பேசி ரஜினி அசத்தியுள்ளார். பொதுவாக மேடைகளில் குட்டி கதை கூறி சில தத்துவங்களை பேசும் ரஜினியை தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்.
ஆனால் தற்போது மேடையில் நடனமாடி, பஞ்ச் வசனங்கள் பேசி அசத்திய ரஜினியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இந்த பழைய விடியோவை ரசிகர்கள் பார்த்துவிட்டு நம்ப தலைவரா இது என ஆச்சர்யத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment