அவர் இல்லாமயா..?: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு திரும்ப வரும் 'அந்த' பிரபலம்!
அண்மையில் துவங்கிய 'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் புகழை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு அதை அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் துவங்கியது.
குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் சிலர் வரவேற்பை பெற்றனர். அதில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ் அஜித்தின் 'வலிமை', விஜய்யின் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேபோன்று அஸ்வின் குமார் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பம் ஆகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 10 கோமாளிகள், 10 குக்குகளின் அறிமுகம் நடந்தது. இந்த சீசனின் புது கோமாளிகளாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் இல்லையென்று ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டனர். புகழ் சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருப்ப்பதால், அவரால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொல்ல இயலவில்லை என செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் தலைகாட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் புகழ் இல்லாததால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் குதுகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment