IPL 2022: யாருமே கண்டுக்க மாட்றாங்க…இந்த அணிக்குதான் விளையாட விரும்புறேன்: ஹர்ஷல் படேல் பளிச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 27, 2022

IPL 2022: யாருமே கண்டுக்க மாட்றாங்க…இந்த அணிக்குதான் விளையாட விரும்புறேன்: ஹர்ஷல் படேல் பளிச்!

IPL 2022: யாருமே கண்டுக்க மாட்றாங்க…இந்த அணிக்குதான் விளையாட விரும்புறேன்: ஹர்ஷல் படேல் பளிச்!



இந்த அணிக்குத்தான் விளையாட விரும்புகிறேன் என ஹர்ஷல் படேல் பேசியுள்ளார்.
2009ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் விளையாடி வரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் (31), கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடர் விக்கெட் மழை பொழிந்து ‘விக்கெட் டேக்கிங் மிஷன்’ என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் விக்கெட் வீழ்த்தாத போட்டியே இல்லை என்பதுதான் உண்மை.
கடந்த சீசனில் மட்டும் மொத்தம் 32 விக்கெட்களை வீழ்த்தி, ஒரு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை டுவைன் பிராவோவுடன் பகிர்ந்துள்ளார். பிராவோ 2013ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 32 விக்கெட்களை எடுத்திருந்தார். இப்படி ஹர்ஷல் படேல் தொடர் விக்கெட் மழை பொழிந்தும், அந்த அணி பிளே ஆஃப் சுற்றோடு வெளியேறிவிட்டது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட ஹர்ஷலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

துல்லியமான பந்துவீச்சு:

முதல் போட்டியில் களமிறக்கப்படவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்தியாவும் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. தற்போது நல்ல பார்மில்தான் இருக்கிறார். வேகம் குறைந்த பந்துகளை எதிர்பாராத நேரத்தில் வீசுவது, துல்லியமான யார்க்கர் போன்ற வித்தைகளில் கை தேர்ந்தவராக இருக்கிறார். இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை தக்கவைக்கவில்லை.

ஆர்சிபி:

மாறாக, விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. நான்காவது நபரை தக்கவைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. நான்காவது நபராக ஹர்ஷல் படேலை தக்கவைத்திருக்க வேண்டும். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என பலரும் பேசி வருகின்றனர். இருப்பினும், ஹர்ஷல் படேலை ஏன் தக்கவைக்கவில்லை என்பது குறித்து அணி நிர்வாகம் எவ்வித கருத்தும் கூறாமல்தான் இருந்து வந்தது.

ஹர்ஷல் பேட்டி:

இந்நிலையில் இதுகுறித்து ஹர்ஷல் படேல் விளக்கமாகப் பேசியுள்ளார். அதில், “என்னை அவர்கள் தக்கவைக்கவில்லை. அதன்பிறகு அணியின் இயக்குநர் மைக் ஹசன் தொடர்புகொண்டு, பணத்தை மிச்சப்படுத்த தான் மூன்று பேரை மட்டும் தக்கவைத்தோம் எனக் கூறினார். நான் மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புகிறேன். அவர்களும் என்னை மீண்டும் அணிக்குள் கொண்டுவர விரும்புவார்கள் என நினைக்கிறேன். ஆர்சிபிதான் எனது திறமையை, வெளி உலகத்திற்குக் காட்ட உதவியது. இதுவரை எந்த அணியும் ஏலம் எடுப்பது குறித்து, தொடர்புகொண்டு பேசவில்லை” எனத் தெரிவித்தார்.
இதன்மூலம், ஹர்ஷல் படேலை மைக் ஹசன் தொடர்பு கொண்டபோது, ‘உங்களை ஏலம் எடுப்போம்’ என்ற உறுதியை அளிக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad