ஓபிஎஸ்சை நெருங்கும் போலீஸ்; அதிமுகவில் திடீர் பரபரப்பு!
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்த உத்தரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிக்கலை கொடுத்துள்ளது. எந்த நேரத்திலும் ஓபிஎஸ் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படலாம் என்ற சூழல் நிலவுவதால் அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள 182.50 ஏக்கர் அரசு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் சார் ஆட்சியர் ரிஷப் நடத்திய விசாரணையில் அம்பலமானது.
அவனியாபுரத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ; பரிசாக கார் அறிவிப்பு!
வருவாய்த்துறை ஆவணம் அ பதிவேட்டில் கணிணி மூலமாக மாற்றம் செய்து 182.50 ஏக்கர் அரசு நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது பிடிக்கப்பட்டது. மேலும் 80 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணி புரிந்த நில அளவையர்கள், வட்டாட்சியர்கள் என்று 7 பேரை மாவட்ட ஆட்சியர் முரளீதரன் நடவடிக்கை எடுத்தார்.
இதுதொடர்பாக பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆண்டு வரையில் பணிபுரிந்த பெரியகுளம் கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, பெரியகுளம் வட்டாட்சியர்கள் ரத்னமாலா, கிருஷ்ணகுமார், துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் சக்திவேல் பிச்சைமணி உதவியாளர்கள் அழகர், ராஜேஷ் விஏஓ சுரேஷ் மற்றும் அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்கள் என 10 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த மெகா மோசடி வழக்கை கடந்த ஜனவரி 4ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் வழக்கு குறித்து புகார் அளித்த பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்பிடம் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டனர்.
இந்நிலையில் மெகா மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர். அதன்படி தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அதிமுக பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நில அளவையர் பிச்சமணி ஆகியோரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.
இதற்கு அடுத்தபடியாக பெரியகுளம் கோட்டாட்சியர்களாக பணியாற்றிய ஆனந்தி மற்றும் ஜெயபிரீதா ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை துவங்கியதால் மெகா நில மோசடி வழக்கு மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் பெரியகுளம் அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷுக்கு முழு பலமே முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ் எள் என்றால் எண்ணெய்யுடன் வந்து நிற்பார் என அதிமுகவினரே கூறுகின்றனர்.
No comments:
Post a Comment