வங்கியில் பணம் எடுக்க தடை.. வாடிக்கையாளர்கள் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

வங்கியில் பணம் எடுக்க தடை.. வாடிக்கையாளர்கள் ஷாக்!

வங்கியில் பணம் எடுக்க தடை.. வாடிக்கையாளர்கள் ஷாக்!



விதிமுறை மீறல் காரணமாக இந்த கூட்டுறவு வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
லக்னோவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி மீது பல்வேறு தடைகளை விதிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 28ஆம் தேதி அறிவித்துள்ளது. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வித்டிரா செய்ய முடியாது. அது சேமிப்பு கணக்காக இருந்தாலும் சரி, நடப்பு கணக்காக இருந்தாலும் சரி; இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.
வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுப்பதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதும் ரிசர்வ் வங்கியின் வழக்கமான நடவடிக்கை. அந்த வகையில் தற்போது இந்தியன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது.

இந்த வங்கியில் பணம் போட்டவர்கள் ரூ.1 லட்சம் வரையில் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது டெபாசிட் பணத்துக்கு ஏதேனும் ஆபத்து வருவோ என்று அஞ்சுகின்றனர். ஆனால் வங்கிக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டுப்பாட்டின் படி, அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த வங்கி மீதான தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த வங்கியில் இனி பணம் போடவும், கடன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இந்த வங்கி இனி யாருக்கும் கடன் கொடுக்கவும், முதலீடுகளைப் பெறவும் முடியாது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் இந்த வங்கி இனி எந்தவொரு நிதிச் செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad