நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கும் விவசாயிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கும் விவசாயிகள்!

நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கும் விவசாயிகள்!


நாடு முழுவதும் இன்றைய தினத்தை துரோக தினமான விவசாயிகள் அனுசரிக்கவுள்ளனர்
விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று சட்டங்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வந்தனர். விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை.
இதையடுத்து, மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உடனடியாக திரும்பப் பெறப்படாது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாயிகள் அறிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, தங்களது போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். அதேசமயம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இந்த வாக்குறுதிகளை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று துரோக தினம் அனுசரிக்கவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகைத் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து மத்திய அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால் மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசை கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.No comments:

Post a Comment

Post Top Ad