ஐஸ்வர்யாவின் பழைய காதலை இழுக்கும் பிரபல நடிகர்..!இத்தனை ஆண்டுகளுக்கு பின் இது தேவையா எனும் ரசிகர்கள்..!
ஐஸ்வர்யாவின் பழைய காதல் கதைகளை பற்றி பேசிய நடிகருக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காதலித்து 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்த்து திடீரெனெ இவர்கள் பிரிவதாக அறிவித்தது குடும்பத்தார் உட்பட ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனையடுத்து இவர்களை பேசி சமாதானம் படுத்தும் நோக்கில் இவர்களது குடும்பத்தார் ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் இவர்களை பற்றி பல கருத்துக்கள் சமூகத்தளங்களில் உலாவருகிறது. இது அது என சொல்லி ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் இவர்களை பற்ற பல கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பிவருகிறார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறிவரும் இவர் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் பழைய காதலை பற்ற பேசியுள்ளார். ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், பின்பு சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததாகவும் கூறினார்.இதனைக்கேட்ட ரசிகர்கள் தற்போது இருக்கும் சூழலில் இதுபோன்ற கருத்துக்கள் தேவைதானா என அவரை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கே திருமணம் ஆகி 18 ஆண்டு காலம் ஆகிவிட்டது. மேலும் இந்த பழைய காதல் கதையெல்லாம் 20 ஆண்டுக்கு முன்பு நடந்தது. இதை தற்போது பேசுவது சரியா என ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தான் இயக்கவிருக்கும் ஆல்பம் பாடல் சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனுஷ் தான் நடிக்கும் வாத்தி படப்பிடிப்பிலிருந்து தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னையில் தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment