போட்றா வெடிய...வேலுநாச்சியார், மருது சகோதரர்களை வரவேற்ற மதுரை மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

போட்றா வெடிய...வேலுநாச்சியார், மருது சகோதரர்களை வரவேற்ற மதுரை மக்கள்!

போட்றா வெடிய...வேலுநாச்சியார், மருது சகோதரர்களை வரவேற்ற மதுரை மக்கள்!



வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அடங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் மலர் தூவி வரவேற்றனர்
நாட்டின் 73ஆவது குடியரசு தினம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடபப்ட்டது. நடப்பாண்டு மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் “இந்தியா 75” என்கின்ற தலைப்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. ஆனால், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இது தொடர்பான விளக்கத்தையும் மத்திய அரசு அளித்திருந்தது.
அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் ஒன்றிய அரசின் தேர்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு மூன்று முறை அவர்கள் எடுத்துரைத்த திருத்தங்களை மேற்கொண்டும் எந்தவித காரணமுமின்றி தமிழகத்தின் சார்பிலான அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தனது வருத்தத்தை கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு தெரிவித்திருந்தார்.

மேலும், டெல்லி குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறுவதோடு, தமிழ்நாடு முழுதும் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு ஒய்யாரமாக அணிவகுப்பில் பங்கேற்றன.

இதையடுத்து, சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்படுத்தும் பொருட்டு, கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன்பெறுகின்ற வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad