கனரா பேங்க் முக்கிய அறிவிப்பு... வட்டியில் மாற்றம்!
இனி அதிக வட்டி லாபம் கிடைக்கும்!
ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை கனரா பேங்க் மாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்களின் முழுப் பட்டியல் இதோ...
கனரா பேங்க்!
புத்தாண்டு தொடங்கியது முதலே இந்தியாவின் முன்னணி வங்கிகள் தங்களது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. சமீபத்தில்தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட வங்கிகள் வட்டி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா பேங்க், தனது வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது.
வட்டியில் மாற்றம்!
7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை கனரா பேங்க் வாடிக்கையாளர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. புதிய வட்டி மாற்றத்துக்குப் பிறகு குறைந்தபட்ச வட்டி 2.90 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி 5.35 சதவீதமாகவும் உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு இதை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2.90 சதவீதமாகவும், அதிகபட்சம் 5.85 சதவீதமாகவும் வட்டி விகிதம் உள்ளது.
புதிய வட்டி!
7 நாள் முதல் 45 நாள் வரை - 2.90%
46 நாள் முதல் 90 days நாள் வரை - 3.90%
91 நாள் முதல் 179 நாள் வரை - 3.95%
180 நாள் முதல் 1 வருடம் வரை - 4.40%
1 வருடம் - 5.10%
1 வருடம் முதல் 2 வருடம் வரை - 5.10%
2 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.10%
3 வருடம் முதல் 5 வருடம் வரை - 5.25%
5 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.25%
கனரா “1111 நாட்கள்” - 5.35%
No comments:
Post a Comment