மயூவிடம் வசமாக சிக்கிய கோபி: எழில், அமிர்தாவை பார்த்து அதிர்ச்சியடையும் ஈஸ்வரி!
பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
பாக்யா வீட்டில் அனைவரும் காலையில் தயார் ஆனதும் ஈஸ்வரி பொங்கல் வைக்க ஆரம்பிக்கிறாள். ஊரில் இருப்பவர்களும் பொங்கல் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். பொங்கல் வைத்துவிட்டு அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். ஊருக்கு வந்து பொங்கல் வைத்தது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சத்தியமூர்த்தி சொல்கிறான்.
அதன்பின்னர் ஊர்க்காரர்களுடன் பேசிவிட்டு பொங்கல் சாப்பிட ஆரம்பிக்கின்றனர். அனைவரும் வீட்டில் இருக்கும் போது எழிலும், அமிர்தாவும் வெளியில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். இங்க இருக்குறது உங்களுக்கு பிடிச்சு இருக்குல என அவன் கேட்கும் போது, அவளும் வேற வீட்ல இருக்குற பீலே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்கிறான். அவளும் ஊரில் இருக்கும் அப்பா, அம்மாவுக்கு சதீஷை வைத்து பொங்கல் கொடுத்துவிட்டது பற்றி எல்லாம் சொல்கிறாள்.
கவனிப்பு எல்லாம் செம்மையா இருக்கே என அமிர்தா கிண்டல் அடிக்கிறாள். அதன்பின்னர் வீட்டிற்குள் இருக்கும் இனியா, நிகிதா போன் பண்ணுகிறாள் என சொல்லி வெளியே வருகிறாள். கோபியும் ராதிகா போன் பண்ணுகிறாள் என வெளியே வருகிறான். நிகிதா பேசி முடித்ததும் இனியாவிற்கு மயூ வீடியோ கால் பண்ணுகிறாள். அப்போது வீடியோவில் கோபியை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அதற்குள் இனியாவை ஈஸ்வரி கூப்பிடவும் போனை கட் பண்ணுகிறாள்.
இதற்கிடையில் எழில், அமிர்தா தனியாக பேசி கொண்டிருப்பதை பார்த்து பாக்யாவை கூப்பிட்டு பேசுகிறாள் ஈஸ்வரி. இவுங்க ரெண்டு பழகுறது எனக்கு பிடிக்கவே இல்லை. பார்த்து இருக்க என கோபப்படுகிறாள். அதன்பின்னர் சொந்தக்காரர்கள் வந்து சத்தியமூர்த்தியிடம் பேசும் போது, இன்னைக்கு மதியம் நம்ம வீட்ல தான் சாப்பாடு. நானே சமைக்க போறேன் என சொல்கிறான். அதன்பின்னர் கஸ்தூரி பாக்யாவை அழைத்து கோபி சார் போன்ல சிரிச்சு சிரிச்சு பேசுறாரு என எச்சரிக்கிறாள்.
அதன்பின்னர் எழிலை கூப்பிட்டு எதுக்காக அமிர்தா கூட சிரிச்சு சிரிச்சு பேசுற. ஊர்க்காரங்க பார்த்தா தப்பா நினைப்பாங்க என ஈஸ்வரி சொல்கிறாள். அதற்கு அவன் அதெல்லாம் பார்த்துக்கலாம் பாட்டி. நீங்க அந்த காலத்துலயே இருக்கீங்க என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன்பின்னர் சத்தியமூர்த்தி சமைத்ததை பாக்யாவுடன் சேர்ந்து அனைவருக்கும் பரிமாறுகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment