எலான் மஸ்கிற்கு போட்டி போடும் இந்தியா: தமிழகத்தின் சார்பில் அழைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

எலான் மஸ்கிற்கு போட்டி போடும் இந்தியா: தமிழகத்தின் சார்பில் அழைப்பு!

எலான் மஸ்கிற்கு போட்டி போடும் இந்தியா: தமிழகத்தின் சார்பில் அழைப்பு!



எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைக்குமாறு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவமனமாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அவரது நிறுவனத்தை இந்தியாவில் அமைக்க எலான் மஸ்க் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் இந்திய பிரிவுக்கான பெயரை பதிவு செய்தது அவரது நிறுவனம்.

ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். டெஸ்லா நிறுவனம் கோரியுள்ள இறக்குமதி வரி குறைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, ட்விட்டர் பயனாளர் ஒருவர், டெஸ்லா இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அப்டேட் ஏதேனும் உள்ளதா என்று எலான் மஸ்க்கை டேக் செய்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை சார்ந்த அமைச்சர்கள் எலான் மஸ்க்கை தங்களது மாநிலத்தில் வந்து உற்பத்தி ஆலையை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர், இந்த நிலையில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைக்குமாறு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் எலான் மஸ்க்., நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மொத்த திட்டமிடப்பட்ட முதலீட்டில் தமிழ்நாடு 34% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் EV தலைநகருக்கு வரவேற்கிறோம். மேலும், உலகின் முதல் ஒன்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் தமிழ்நாடும் ஒன்றாகும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, “இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் மிஸ்டர் மஸ்க். தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இங்கு தொழிற்சாலை அமைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்யும். எங்களது திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம்” என்று மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் எலான் மஸ்க்கை வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad