நீட் தேர்வு: ஒரு வழியாக அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்.பி.க்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

நீட் தேர்வு: ஒரு வழியாக அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்.பி.க்கள்!

நீட் தேர்வு: ஒரு வழியாக அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்.பி.க்கள்!



தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அரசியல் கட்சியினர் சந்தித்தனர்
தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் மத்திய அரசுக்கு இதுவரை அனுப்பவில்லை என தெரிகிறது.

இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கத் திட்டமிருந்தனர். ஆனால், கடந்த மூன்று முறையும் அவர்களுக்கு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது முறை அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் விரக்தியடைந்தனர்.

அனைத்து கட்சி எம்.பிக்கள் 3 முறை சென்றும் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை. அரசியல் காரணத்திற்காக தமிழ்நாடு எம்.பிக்களை அமித்ஷா சந்திக்க மறுக்கிறார். இது கண்டிக்கத்தக்கது என டி.ஆர்.பாலு கடுமையாக சாடினார். ஆனால், அமித் ஷா பல்வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும், தமிழக அரசியல் கட்சியினரை ஜனவரி மாதம் 17ஆம் தேதி (இன்று) சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பிக்கள் சந்தித்தனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அவரை சந்தித்த தமிழக எம்.பிக்கள், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad