திருவள்ளுவர் தினம்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 15, 2022

திருவள்ளுவர் தினம்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை!

திருவள்ளுவர் தினம்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை!



புதுச்சேரியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. மறைமலை அடிகள் சாலை புதிய பேருந்து நிலையம் வெளியே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன், சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், துணை சட்டப் பேரவைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், திராவிடர் கழகம் வீரமணி தலைமையிலும், மதிமுக அமைப்பாளர் கபிரியேல் தலைமையிலும், மற்றும் பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad