பூஸ்டர் தடுப்பூசி போட்ட பிறகும் புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 15, 2022

பூஸ்டர் தடுப்பூசி போட்ட பிறகும் புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா!

பூஸ்டர் தடுப்பூசி போட்ட பிறகும் புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா!


புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான நாராயணசாமி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளாதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரில் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முந்தினம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 1,471 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, இன்று 2,344 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும், 1213 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் கொரோனா பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாஹே பிராந்தியத்தில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அதில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்கள பணியாளர் என்ற முறையில் கடந்த 13-ம் தேதி நாராயணசாமி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad