ஒரே குடும்பத்தில் 3 சிறுமிகள் மரணம்… நடந்தது என்ன?
\
திருவண்ணாமலை மாவட்டம் கம்புப்பட்டு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த சு.கம்புப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாபுக்கான் - தில்சாத் தம்பதியினருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று, 14 வயதுள்ள இரட்டையரான நஸ்ரின், நசீமா, மற்றம் 12 வயதுள்ள ஷாகிரா ஆகியோர் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, கால்நடைகளை கழுவுவதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்றனர்.
திடீரென ஆழமான பகுதிக்கு தவறிச்சென்ற குந்தைகள் தண்ணீரில் மூழ்கினர். சிறுமிகள் உதவிக்கு அழைத்தும் அந்த நேரத்தில் ஏரியில் அருகே யாரும் இல்லாததால் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெகுநேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததை உணர்ந்த பெற்றோர் ஏரிக்கு சென்று தேடியபோது குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தைகளின் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் குழந்தைகளின் உடல்களை ஆய்வு செய்தார். விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment