அடுத்த சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் குமார்..மாசா மாசம் ஒரு கன்டன்ட் குடுக்குறாரே..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

அடுத்த சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் குமார்..மாசா மாசம் ஒரு கன்டன்ட் குடுக்குறாரே..!

அடுத்த சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் குமார்..மாசா மாசம் ஒரு கன்டன்ட் குடுக்குறாரே..!


அஸ்வின் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் பயனடைந்தனர்.அதில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அளவு பெரும் புகழும் கிடைத்தது. அதன் காரணமாக அவர்களுக்கு ஏராளமான படவாய்ப்புகளும் குவிந்தன. புகழ், ஷிவாங்கி, தர்ஷா என இதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பல படங்களில் நடித்துவருகின்றனர்.


அதில் மிக முக்கியமான ஒருவர் தான் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். படப்பிடிப்பு முடிந்து இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்தது. இதையொட்டி படத்திற்கு ஒரு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு பலரை ஆத்திரத்தில் ஆழ்த்தியது.பொதுவாக எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைக்கு மேல் கேட்டு தூங்கிவிட்டேன். நான் கேட்டு தூங்காத கதை இதுமட்டுமே என பேசினார். இந்த பேச்சு சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் கோபமடைய செய்தது. பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக படத்தின் வெளியீட்டையே தள்ளிவைத்தது படக்குழு.

இந்நிலையில் பொங்கலுக்கு எதிர்பாராத விதமாக இப்படம் வெளியானது. பல கலவையான விமர்சனங்களை பெற்ற என்ன சொல்ல போகிறாய் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அஸ்வின் பேசிய பேச்சுதான் இதற்கு காரணம் என்கின்றனராம் படக்குழு. இதனால் அஸ்வின் தான் பேசியது தவறு என்பதுபோல் மக்களிடையே மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிடுமாறு கேட்டுள்ளது படக்குழு. அதற்கு அஸ்வின் அதெல்லாம் செய்யமுடியாது என மறுத்துவிட்டாராம்.


மேலும் சமீபத்தில் அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும் என்பதைப்போல் ஒரு பதிவை போட்டிருக்கிறார் அஸ்வின்.
இது எரியிற தீயில் என்னை ஊற்றுவதைபோல் ஆகிவிட்டது. வெளியான படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இந்த நிலையில் இது தேவையா என ரசிகர்கள் மீண்டும் அஸ்வினை பதம் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad