ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்! - வெளியான அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்! - வெளியான அதிர்ச்சி தகவல்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்! - வெளியான அதிர்ச்சி தகவல்!ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சுணக்கம் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்து.

500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் நாளை (12.01.2022) போராட்டம் அறிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழக அரசு பொது மக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருவதை வரவேற்கிறோம். அதே வேளையில், நியாய விலை கடைகளுக்கு மொத்தமாக கொண்டு வரும் பொருட்களின் அளவு குறைவாக உள்ளது.


வெல்லம் தரமற்ற நிலையில் உள்ளது. பொருட்களை வைப்பதற்கான பைகள் குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும், 500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12.01.2022) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், வழக்கம் போல் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப்படும். மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad