கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு; உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும் – ராஜ கண்ணப்பன் தத்துவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 20, 2022

கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு; உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும் – ராஜ கண்ணப்பன் தத்துவம்!

கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு; உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும் – ராஜ கண்ணப்பன் தத்துவம்!


முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடக்கும் தொடர் வருமானவரி சோதனையில் எந்த வித உள்நோக்கமும் கிடையாது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"பொங்கலுக்கு வந்தவர்கள் அரசு பேருந்து கிடைக்காததால் சொந்த வாகனங்களிள் சென்றதாக சமூக வலைதளங்களில் பரவுவது குறித்த கேள்விக்கு:

சமூக வலைதளங்களில் வருவதை நம்ப வேண்டாம். பொங்கல் பண்டிகையின் போது அனைத்து நாட்களும் பேருந்துகள் கூட்டமின்றி சென்றது. யாரும் இடம் இல்லை என்று சொல்லவும் இல்லை, யாரும் புகார் அளிக்கவும் இல்லை. லாக்டவுன் அன்று கோட்டாட்சியர்களை வைத்து பேருந்துகளை சரியாக அனுப்பியதால் பொது மக்கள் நிம்மதியாக பயணித்தார்கள். இது குறித்து எந்தவித புகாரும் எங்களுக்கு வரவில்லை.பொங்கல் தொகுப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்த கேள்விக்கு:

பொங்கல் தொகுப்பில் விட்டுப் போன பொருட்களை இன்று வாங்கிக் கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் 17 பொருட்கள் இருப்பதால் 1,2 பொருள்கள் விட்டுப் போயிருக்கலாம் ஆனால் அது தற்போது சரியாகி விட்டது. பொங்கல் தொகுப்பை அனைவரும் பெற்றுக்கொண்டனர் மீதமுள்ளவர்களுக்கும் முதல்வர் கொடுக்கச் சொல்லிவிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன், மனைவி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும். தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான். யார் தப்பு செய்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிப்பது இயல்பு. இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad