ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை? தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 20, 2022

ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை? தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?

ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை? தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?


தமிழ்நாட்டில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் இதே நிலைமை தான் என்றாலும் பல மாநிலங்களில் உச்சத்தை எட்டிவிட்டது என்று ஆய்வாளர்கள் கூற, தமிழ்நாட்டில் இம்மாத இறுதியில் தான் உச்சத்தை அடையும் என்கிறார்கள்.
நேற்று மட்டும் தமிழகத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 39 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலையில் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் 28 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் பாதிப்பு உச்சத்தை எட்டும் போது எவ்வளவு இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய உடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாத இறுதி வரை இரவுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜனவரி 9, 16 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த சூழலில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என விசாரிக்கையில் அதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

பாதிப்பு 28ஆயிரத்தை எட்டியுள்ள போதும் மிகக் குறைவான கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலையில் நோய் தீவிரம் அதிகமாக இருந்ததால் மாவட்டங்களுக்குள் செல்லவே இ பாஸ் பெற்று செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஆனால் நிலைமை தற்போது அப்படி இல்லை என்கிறார்கள்.

தற்போது ஓமைக்ரான் பாதிப்பே அதிகளவில் ஏற்படுவதாகவும் ஆனால் சோதனை முடிந்து ரிப்போர்ட் வருவதற்குள் குணமாகிவிடுவதாக கூறுகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவியும் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு வாரக் காலம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் பாதிப்பு சரியாகிவிடுகிறது.

இதனால் ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்க பல மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவிலும் இதுதான் நிலைமை.
அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தும் போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் பொது இடங்களில் அதிகம் கூடிவிட வாய்ப்பிருந்ததாலே கடந்த வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad