தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் புதிய சர்ச்சை: ரஜினியிடம் கோரிக்கை!
தங்களது மகன், மருமகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடியுள்ள கதிரேசன் தம்பதியினர் கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்துள்ளதுதான் தற்போதையை கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக உள்ளது. நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்களின் திடீர் பிரிவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்..
இது தொடர்பாக இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று இருவரும் தெரிவித்திருந்தனர்.இவர்களின் விவாகரத்தை தொடர்ந்து பலரும் பலவித கதைகளை அவிழ்த்து விட்டு வரும் நிலையில் தனுஷ் தன் மகன் எனக்கோரி நீதிமன்றத்தை நாடிய சர்ச்சை தம்பதிகள், தங்களது மகன், மருமகளை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி. இவர்களது மூத்த மகன் கலையரசன் பிளஸ் ஒன் படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.இந்நிலையில் தனுஷின் விவாகரத்தை தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்த இந்த தம்பதியினர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், ஐஸ்வர்யா பிரிவிற்கான காரணம் என்ன என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சர்ச்சை தம்பதினர் தங்களது மகன், மருமகளை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது சலசலப்பை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment